சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா

திருவாரூரில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா 65 பயனாளிகளுக்கு கலெக்டர்-எம்.எல்.ஏ. ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

Update: 2022-04-03 17:58 GMT
திருவாரூர்:
திருவாரூரில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா 65 பயனாளிகளுக்கு கலெக்டர்-எம்.எல்.ஏ. ஆகியோர்  நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
நலத்திட்ட உதவிகள் 
திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் 75-வது சுதந்திர தின விழாைவயொட்டி ‘சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா’ நடந்தது. விழாவில்  65 பயனாளிகளுக்கு ரூ.89 ஆயிரத்து 240 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்,  பூண்டி.கே.கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர். முன்னதாக சுதந்திர போராட்ட தியாகிகள் புகைப்படங்கள் அடங்கிய புகைப்படம் மற்றும் பல்துறை பணி விளக்க கண்காட்சியை பார்வையிட்டனர். அப்போது கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறியதாவது:-
இந்திய சுதந்திர வரலாற்றில் தமிழக சுதந்திர போராட்ட தியாகிகள்,  சுதந்திர போராட்ட தியாகிகளை போற்றும் வகையில் சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா சுதந்திர போராட்ட தியாகிகள் புகைப்படங்கள் அடங்கிய புகைப்பட கண்காட்சி மற்றும் பல்துறை பணி விளக்க கண்காட்சி நடைபெற்றது. தமிழக சுதந்திர போராட்ட தியாகிகளின் குறிப்புகள், வாழ்க்கை வரலாறுகள், தேசபக்தி உணர்வுகளை அறிந்து கொள்ளவும், அரசின் திட்டங்களை அறிந்து கொள்ளவும் இவ்விழா மிகவும் உதவியாக இருந்தது.இவ்வாறு கலெக்டர் கூறினார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
விழாவில் ஒவ்வொரு நாளும் பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், சுய உதவிக்குழுவினரின் நாடகங்கள், போலீசாரின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் மாவட்ட வருவாய் அலுவலா சிதம்பரம், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவனபிரியா, திருவாரூர் நகர்மன்ற உறுப்பினர் பிரகாஷ், சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஹேமசந்த் காந்தி, வேளாண்மை துணை இயக்குனர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா, சமூக நலத்துறை அலுவலர் கார்த்திகா, தாசில்தார் நக்கீரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்