மளிகை கடைக்காரரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

தஞ்சையில் மளிகை கடைக்காரரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-03 18:45 GMT
தஞ்சாவூர்:-

தஞ்சை கீழவாசல் சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்தவர்  முத்துக்குமார் (வயது42). மளிகை கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் முத்துக்குமார் மோட்டார் சைக்கிளில் தஞ்சை பழைய மீன் மார்க்கெட் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் நின்ற டபீர்குளம் ரோடு பகுதியை சேர்ந்த ஏழுமலை (22) என்பவர் முத்துக்குமாரின் மோட்டார் சைக்கிளை மறித்து பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஏழுமலை கத்தியை காட்டி மிரட்டி முத்துக்குமார் சட்டையில் இருந்து ரூ.500-ஐ பறித்து சென்றார். இதுகுறித்து முத்துக்குமார் தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்