நாமக்கல்லில் உலக காசநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாமக்கல்லில் உலக காசநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

Update: 2022-04-03 17:48 GMT
நாமக்கல்:
உலக காசநோய் தினத்தையொட்டி நுரையீரல் நோய் துறை மற்றும் மாவட்ட காசநோய் மையம் சார்பில் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழச்சிக்கு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி தலைமை தாங்கினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக காசநோய் பிரிவு துணை இயக்குனர் வாசுதேவன் கலந்து கொண்டு, காசநோய் பாதிப்பு குறித்து பேசினார். நுரையீரல் தொற்று குறித்து குழந்தைகள் சிறப்பு டாக்டர் அனுராதா விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள், காசநோய் பிரிவு பணியாளர்கள், மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்