வீட்டிற்குள் புகுந்த பாம்பு

வீட்டிற்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது

Update: 2022-04-03 17:43 GMT
கரூர்
நொய்யல், 
திருக்காடுதுறை ஆர்.எஸ்.தோட்ட பகுதியை சேர்ந்தவர் ஜெய் சவுத்ரி (வயது 47). இவரது வீட்டிற்குள் 5 அடிநீளமுள்ள நாகப்பாம்பு ஒன்று புகுந்து படம் எடுத்து ஆடியது. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் வீட்டிற்குள் புகுந்த நாகப்பாம்பை பாம்பு பிடிக்கும் குச்சி மூலம் பிடித்து சென்று வனப்பகுதியில் விட்டனர். 

மேலும் செய்திகள்