ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு

மயிலாடுதுறை அருகே கடுவங்குடி ஊராட்சியில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார்

Update: 2022-04-03 17:41 GMT
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே கடுவங்குடி ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கப்பிச்சாலை அமைக்கும் பணியை மாவட்ட திட்ட இயக்குனர் முருகண்ணன் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து சேத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாக சுற்றுச்சுவர் மற்றும் கழிவறை கட்டும் பணி, தலைஞாயிறு ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணி, குறிச்சி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார். மேலும். கடுவங்குடி, சேத்தூர், குறிச்சி, தலைஞாயிறு ஆகிய 4 ஊராட்சிகளில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் நடந்துவரும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு மேற்கொண்ட திட்ட இயக்குனர், பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். அந்த ஆய்வின்போது ஒன்றிய ஆணையர் அன்பரசன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) மீனா, உதவி கோட்ட பொறியாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய பொறியாளர் இளமுருகன், ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்தென்றல் என்கிற மகேந்திரன் மற்றும் பணி மேற்பார்வையாளர்கள், ஒன்றிய அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்