ஆர்.கே.எஸ்.கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
இந்திலி ஆர்.கே.எஸ்.கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி அருகே இந்திலியில் உள்ள டாக்டர் ஆர்.கே.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காவலன் செயலி மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஜான்விக்டர் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி கலந்துகொண்டு காவலன் செயலியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், அதன் மூலம் ஏற்படும் பயன்கள் குறித்து விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதையடுத்து மாணவிகள் அனைவரும் தங்களது செல்போன்களில் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்தனர். தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை ஏற்றனர். பிளாஸ்டிக் இல்லா உலகத்தை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கும் வகையில் மாணவர்கள் உலக வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில்,கள்ளக்குறிச்சி, சின்னசேலம் போலீசார் மற்றும் உதவிபேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்வி இயக்குனர் விக்னேஷ்குமார் நன்றி கூறினார்.