கரூர்,
கரூர் அருகே உள்ள மண்மங்கலம் புதுகாளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ராமர் (வயது 47). பெயிண்டர். இவர் கரூர்-சேலம் நெடுஞ்சாலையில் மண்மங்கலம் அரசு மருத்துவமனை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் எதிர்பாராத விதமாக ராமர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிசைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து வாங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.