தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
நொய்யல்,
வாங்கல் அருகே திருமக்கூடலூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 48). கூலித்தொழிலாளி. இந்நிலையில் திருமக்கூடலூரில் உள்ள ஒரு கோவிலில் வரி விரிப்பது தொடர்பாக இவருக்கு சரியானபடி தகவல் தெரிவிக்க தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த செந்தில்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வாங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பிரே பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செந்தில்குமாரின் மனைவி அம்பிாக கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.