ஆம்பூரில் ரெயில்முன் பாய்ந்து விவசாயி தற்கொலை

ஆம்பூரில் ரெயில்முன் பாய்ந்து விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-04-03 17:08 GMT
ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கென்னடிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 50). விவசயி. இவருக்கு திருமணமாகி மனைவி, பிள்ளைகள் உள்ளனர். இந்தநிலையில் மோகனுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிக வலியால் அவதிப்பட்ட அவர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

அப்போது சிகிச்சை அளித்த டாக்டர்கள், புற்றுநோயை  முழுமையாக சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியாது என கூறியதாக தெரிகிறது. இதனால் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த மோகன் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். மேலும்  அதிக வலி ஏற்பட்டுள்ளது. 

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த மோகன் ஆம்பூர் அடுத்த கிழக்குப்பகுதியில் காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி வந்த ெரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மோகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்