கஞ்சா வைத்திருந்தவர் கைது
விழுப்புரம் அருகே கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்யா மற்றும் போலீசார் விழுப்புரம் அருகே உள்ள காவணிப்பாக்கம் கிராம பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காவணிப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் மறித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் காவணிபாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சோ்ந்த ராஜேந்திரன் மகன் ரமேஷ்(வயது 26) என்பதும், அவர் கஞ்சா வைத்திருந்ததும் தொியவந்தது. இதையடுத்து ரமேசை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.