ரெயில்வே ஊழியரின் மோட்டார் சைக்கிள் திருட்டு

விழுப்புரத்தில் ரெயில்வே ஊழியரின் மோட்டார் சைக்கிளை திருடியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-04-03 16:56 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் பழைய ஆஸ்பத்திரி ரோட்டை சேர்ந்தவர் சலீம் மகன் சரோன் பாஷா (வயது 36). இவர் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று சரோன் பாஷா, தனது மோட்டார் சைக்கிளை ரெயில் நிலையம் வெளியே விட்டு விட்டு வேலைக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதனை யாரோ மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்