கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர் கைது
உளுந்தூர்பேட்டை அருகே கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே ஒலையனூர் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அதே ஊரைச்சேர்ந்த தமிழ்செல்வன் (வயது 20) என்பதும், 300 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட தமிழ்செல்வன் தனியார் கல்லூாி ஒன்றில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.