5 இடங்களில் தி.மு.க. கொடியேற்று விழா

வண்டுவாஞ்சேரியில் 5 இடங்களில் தி.மு.க. கொடியேற்று விழா நடந்தது.

Update: 2022-04-03 16:13 GMT
வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் 5 இடங்களில் தி.மு.க.கொடியேற்று விழா நடந்தது. விழாவிற்கு ஒன்றிய அவைத்தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்றத்தலைவர் தமிழ்ச்செல்வி குமார் வரவேற்றார். தி.மு.க. மாவட்ட பொறுப்பாளரும், மீன் வளர்ச்சிக் கழக தலைவருமான கவுதமன் கலந்து கொண்டு கட்சிக்கொடியை ஏற்றி வைத்தார். இதில் மாவட்ட பிரதிநிதி ரவிச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர் சோழன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வைத்தியநாதன், கோமதி தனபால், செல்லமுத்து எழிலரசன், வக்கீல்கள் பாரிபாலன், அன்பரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்