திருவாரூரில் 2 பெண் போலீசார் பணியிடை நீக்கம்

திருவாரூரில் பெண் கைதி தப்பி ஓடியது தொடர்பாக 2 பெண் போலீசாரை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-04-03 15:30 GMT
திருவாரூர்:
திருவாரூரில் பெண் கைதி தப்பி ஓடியது தொடர்பாக 2 பெண் போலீசாரை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.
2 பெண் போலீசார் 
திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கஸ்தூரி. இவர் சாராயம் விற்ற வழக்கில் பேரளம் போலீசாரால் கைது செய்யப்பட்டு திருவாரூர் மகளிர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் கஸ்தூரிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவர் கடந்த 24-ந்தேதி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 
ஆஸ்பத்திரியில் அவருக்கு பாதுகாப்புக்கு 2 பெண் போலீசார் நியமிக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் கடந்த 30-ந்தேதி ஆஸ்பத்திரியில் இருந்து கஸ்தூரி தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.   
பணியிடை நீக்கம் 
இ்ந்தநிைலயில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் தனது மகள் வீட்டில் பதுங்கி இருந்த கஸ்தூரியை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
2 பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இருந்து பெண் கைதி தப்பி ஓடிய சம்பவம் திருவாரூா மாவட்டம் முழுவதும்  பரபரப்பை ஏற்படுத்தியது. 
இந்தநிலையில் திருவாரூர் மருத்துக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கைதி கஸ்தூாிக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசார் சத்தியா, கோமதி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து  போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டுள்ளாா்.

மேலும் செய்திகள்