மின்சாரம் தாக்கி ஒப்பந்த பணியாளர் சாவு

மின்சாரம் தாக்கி ஒப்பந்த பணியாளர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-04-03 15:16 GMT
உத்தமபாளையம்:
கம்பம் அருகே உள்ள நாராயணதேவன்பட்டியை சேர்ந்தவர் மகன் அஜித்குமார் (வயது 26). இவர் காமயகவுண்டன்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வந்தார். நேற்று  காமயகவுண்டன்பட்டியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டது. இதை சரி செய்யும் பணியில் அஜித்குமார் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராயப்பன்பட்டி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவருக்கு கமலி என்ற மனைவியும் 2 வயதில் மகளும் உள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்