போடியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
போடியில் பலத்த காற்றுடன் மழை சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது
போடி:
போடியில் இன்று பகலில் கடுமையான வெயில் அடித்தது. இதனால் பொதுமக்கள் வெயில் கொடுமை தாங்காமல் தவித்தனர். இந்தநிலையில் மாலை 6½ மணி முதல் சுமார் ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவியது. போடி காமராஜ் பஜார் பகுதியில் புதிதாக கழிப்பறை மற்றும் சாக்கடை கால்வாய் கட்டப்படுகிறது. இதற்காக சாக்கடை கழிவு நீர் போகும் வழி மூன்றாந்தல் மற்றும் மேற்கு ராஜவீதியில் திருப்பி விடப்பட்டுள்ளது. இந்தநிலையில் மழை காரணமாக நாட்டாண்மைக்கார தெரு உள்பட சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பாதாள சாக்கடை மற்றும் சாக்கடை கால்வாய்கள் சரிவர தூர்வாரப்படாத காரணத்தால் சாக்கடை நிரம்பி கழிவு நீர் சாலைகளில் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். போடியில் நேற்று இரவும் இது போல பலத்த மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.