குட்டைத்திடலில் இடம்பிடித்த தள்ளுவண்டிகள்குட்டைத்திடலில் இடம்பிடித்த தள்ளுவண்டிகள்

குட்டைத்திடலில் இடம்பிடித்த தள்ளுவண்டிகள்குட்டைத்திடலில் இடம்பிடித்த தள்ளுவண்டிகள்

Update: 2022-04-03 13:36 GMT
உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு  ஏலம் நடப்பதற்கு முன்பே குட்டை திடலில் தள்ளுவண்டிகள் இடம் பிடித்துள்ளன.
மாரியம்மன் கோவில்
உடுமலையில் சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்கும் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நாளை  நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி வருகிற 23ந் தேதி வரை நடக்கும். தேர்த்திருவிழாவையொட்டி குட்டைத்திடலில் தற்காலிக கடைகள்அமைக்கப்படும். ராட்டினம், மேஜிக் ஷோ உள்ளிட்ட கேளிக்கை நிகழ்ச்சிகள்இடம்பெறும்.இதற்காக வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள குட்டைத்திடலில் 91 சென்ட் நிலப்பரப்பில் கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்வது மற்றும் தற்காலிக கடைகளை அமைத்துக்கொள்வது ஆகியவற்றிற்குரிய உரிமத்திற்கான ஏலம் வருவாய் துறைமூலம் விடப்படும்.
ஆனால் உடுமலை தாலுகா அலுவலகத்தில் 2 முறை நடந்த ஏலத்தின்போதும், ஏலத்தில் கலந்து கொண்ட 4 பேரும், ஏலத்திற்கு அரசின் குறைந்தபட்ச ஏலத்தொகை அதிகமாகஉள்ளது என்றும், குறைந்தபட்சஏலத்தொகையை குறைக்கக்கோரியும் வலியுறுத்தினர்.ஆனால் குறைந்த பட்ச ஏலத்தொகை குறைக்கப்படாததால் யாரும் ஏலம் கோரவில்லை. அதனால் தேதி குறிப்பிடப்படாமல் ஏலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தள்ளுவண்டிகள் இடம்பிடிப்பு
இந்தநிலையில் நேற்று  காலை குட்டைத்திடலில்தள்ளுவண்டிகள் வரிசையாக நிறுத்தப்பட்டன.ஏலம் முடிந்த பிறகு ஒப்பந்ததாரர் நிர்ணயிக்கும் வாடகை தொகையை கொடுத்து விடலாம், ஏலம் நடக்கும் வரை காத்திருந்தால் இந்த இடம் நமக்குகிடைக்காமல் போகலாம் என்று கருதிய தள்ளுவண்டிவியாபாரிகள்
அவசர, அவசரமாக அங்கு தள்ளுவண்டிகளைநிறுத்தியுள்ளனர். அதேபோன்று சிறுவர்களுக்கான விளையாட்டு அம்சங்களும் அங்குகொண்டுவரப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்