திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியது
திருச்செந்தூரில் நேற்று கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி தினங்களையொட்டி கடல்நீர் சற்று உள்வாங்குவதும், பின்னர் சிறிதுநேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்புவதும் வாடிக்கையாகும். அதன்படி கடந்த 31-ந்தேதி அமாவாசையையொட்டி சற்று உள்வாங்கிய கடல்நீர் சிறிதுநேரத்தில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது. இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து கடந்த 3 நாட்களாக இதேபோன்று காலையில் சிறிதுநேரம் கடல்நீர் உள்வாங்குவதும், பின்னர் சிறிதுநேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பியும் வருகிறது.
விடுமுறை நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தனர். காலையில் சிறிதுநேரம் கடல்நீர் உள்வாங்கியிருந்தபோது, கடலில் தென்பட்ட பாறைகளில் நின்று சில பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். வழக்கம்போல் ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி விட்டு, சாமி தரிசனம் செய்தனர்.
--