பொன்மலர்பாளையம் கல்யாண சுப்பிரமணியர் திருக்கல்யாண விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

பொன்மலர்பாளையம் கல்யாண சுப்பிரமணியர் திருக்கல்யாண விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

Update: 2022-04-03 13:12 GMT
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் அருகே பொன்மலர்பாளையம் சொக்கநாதபுரத்தில் உள்ள வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணியர் திருக்கல்யாண விழா நேற்று நடைபெற்றது. பொன்மலர்பாளையம் பாலாம்பிகை உடனாகிய வைத்தீஸ்வரன் கோவில் அனைத்து சிவனடியார்கள் அருட்பணி மன்றம் சார்பில் விழா நடந்தது. விழாவையொட்டி காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் அஸ்வினி நட்சத்திரத்தில் தேவார திருவாசகம் ஓதப்பட்டு தமிழ் முறைப்படி யாக வேள்வி நடைபெற்றது. 
தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், கைலாய வாத்திய முழக்கத்துடன் மாங்கல்ய தாரணம் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது. 
விழாவில் பொன்மலர்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை வைத்தீஸ்வரன் கோவில் அனைத்து சிவனடியார்கள் அருட்பணி மன்றத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்