நாமக்கல் முதலைப்பட்டி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா கத்திபோடும் நிகழ்ச்சி நடந்தது

நாமக்கல் முதலைப்பட்டி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா கத்திபோடும் நிகழ்ச்சி நடந்தது

Update: 2022-04-03 13:12 GMT
நாமக்கல்:
நாமக்கல் - சேலம் சாலை முதலைப்பட்டியில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை தீர்த்த அழைப்பு நிகழ்ச்சி நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான சக்தி அழைக்கும் நிகழ்ச்சி நேற்று காலையில் நடந்தது. இதையொட்டி முதலைப்பட்டி புதூரில் உள்ள நந்தவனத்தில் இருந்து சாமியை ஊர்வலமாக தூக்கி வந்தனர். இந்த ஊர்வலத்திற்கு முன்பு பெரிய மணலி பகுதியை சேர்ந்த வீர குமாரர்களின் கத்தி போடும் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து மாலையில் மகா ஜோதி ஊர்வலம் மற்றும் இரவு மகா தளிகை பூஜை நடந்தது. சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடைபெற்றதால், இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (திங்கட்கிழமை) மஞ்சள் நீர் மெரவனை நிகழ்ச்சி நடக்கிறது.

மேலும் செய்திகள்