புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை

புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை

Update: 2022-04-03 13:00 GMT
புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புலிகள் 
மனதை கொள்ளை கொள்ளும் அழகு பல்வேறு விதமான வியக்கத்தகு அற்புதங்கள் உயிரினங்கள் நிறைந்தது வனப்பகுதி. அதன் தன்மையையும் பருவநிலை மாற்றத்தை தக்க வைப்பதில் வனவிலங்குகளின் பங்கு முக்கியமானதாகும். 
பல்லுயிர் பெருக்கத்தை தக்க வைப்பதிலும் காடுகளை அழிவில் இருந்து காப்பதிலும் புலிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. பூனை இனங்களில் பெரிய விலங்கான புலி பாலூட்டி இனத்தைச் சார்ந்தது. 
இதன் உறுமல் சத்தம் 3 கிலோமீட்டர் தூரம் வரையிலும் எதிரொலிக்கும்.  300 கிலோ எடை கொண்டது. 16 வாரம் கர்ப்ப காலம் உடைய பெண்புலி ஒரே பிரசவத்தில் 4 குட்டிகளை ஈன்றெடுக்கும் தன்மை உடையது.
புலியின் இனப்பெருக்க காலம் ஆண்டு முழுவதும் இருந்தாலும்கூட நவம்பர் முதல் ஏப்ரல் வரை அதிகமாக இருக்கும். 
பிறந்த புலிக்குட்டிகளுக்கு கண்கள் தெரியாது என்பதால் அதன் தாய் குட்டிகளை பாறையிடுக்கு, குகைகளில் பாதுகாப்பாக மறைத்து வைத்துக் கொள்ளும். இரண்டு மாத காலத்திற்கு பிறகு மறைவிடத்தில் இருந்து வெளியே வரும் புலிக்குட்டிகள் தாயுடன் இணைந்து பயணிக்க தொடங்கிவிடும். 
அப்போது சிறிய மான் குட்டிகளை தாய் புலி பிடித்து வந்து தனது குட்டிகளுக்கு வேட்டையாடவும் கற்றுத் தருகிறது.
புலிக்குட்டிகள் இரண்டு வயது நிரம்பியுடன் தனியாக பிரிந்து சென்று எல்லையை உருவாக்கி வாழ்ந்து வரும். அதன்படி பெண் புலிகள் 20 சதுர கிலோமீட்டர் பரப்பையும் ஆண்புலிகள் 60 முதல் 100 சதுரகிலோ மீட்டர் பரப்பளவையும் எல்லையாக வைத்துக் கொள்வதாக கணக்கிடப்பட்டு உள்ளது.
மணிக்கு 40 மைல் தொலைவிற்கு ஓடும் ஆற்றல் பெற்றது.  நொடிக்கு 30 அடி தூரம் வரை பாய்ந்து  விலங்குகளை வேட்டையாடும் வல்லமை படைத்தது. ஒரே சமயத்தில் சுமார் 40 கிலோ உணவை இறையாக எடுத்துக் கொள்ளும். 
கோரிக்கை
 தமிழகத்தில் களக்காடுமுண்டன்துறை, முதுமலை, ஆனைமலை, சத்தியமங்கலம் பகுதியில் புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டு தற்போது வரையிலும் வனத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. 
தற்போது புலிகளின் இனப்பெருக்க காலம் என்பதால் அதை சாதகமாகக் கொண்டு அதன் இனத்தை அதிகரிக்கச் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்