சிறப்பு முகாமில் 1023 பேருக்கு கொரோனா தடுப்பூசி
சிறப்பு முகாமில் 1023 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதற்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 100-க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. சிறப்பு முகாமில் முதல் டோஸ் 45 வயதுக்கு மேல் 7 பேர், 18 வயது முதல் 44 வயதுக்குள் 17 பேர், 15 முதல் 17 வயதுக்குள் 14 பேர், 12 முதல் 14 வயதுக்குள் 8 பேர் என மொத்தம் 46 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. 2-வது டோஸ் 466 பேர், 2 டோஸ் செலுத்தி குறிப்பிட்ட நாட்கள் பூர்த்தி அடைந்த 511 பேருக்கு பூஸ்டர் டோஸ் உள்பட மொத்தம் 1,023 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.