கேரளாவில் நடைபெறும் மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க முதல்வருக்கு நேரில் அழைப்பு விடுத்த கேரள மந்திரி
கேரளாவில் நடைபெறும் மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க முதல் அமைச்சர் ஸ்டாலினுக்கு கேரள மந்திரி நேரில் அழைப்பு விடுத்தார்.
சென்னை,
கேரளாவில் வருகிற 9-ம் தேதி மாநில சுயாட்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க கேரள அரசின் சார்பில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு அம்மாநில மந்திரிகள் அழைப்பு விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், கேரள மந்திரி ராதாகிருஷ்ணன் இன்று காலை சென்னை திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அப்போது அவர் மாநில சுயாட்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு முதல் அமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தார்.
அப்போது பொதுச் செயலாளர் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.