ஓய்வுபெற்ற ரெயில்வே அதிகாரி வீட்டில் பணம், வெள்ளிப்பொருட்கள் கொள்ளை

அரக்கோணம் அருகே ஓய்வு பெற்ற ரெயில்வே அதிகாரி வீட்டில் வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

Update: 2022-04-02 20:40 GMT
அரக்கோணம்

அரக்கோணம் அருகே ஓய்வு பெற்ற ரெயில்வே அதிகாரி வீட்டில் வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

அரக்கோணத்தை அடுத்த மோசூர் எத்திராஜ்நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 60), ரெயில்வே துறையில் டெக்னிக்கல் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரின் மனைவி அமுதவள்ளி (58). இவர்களின் மகள் டெல்லியில் வசித்து வருகிறார்.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள மகளை பார்ப்பதற்காக கணவன், மனைவி இருவரும் டெல்லி சென்றனர்.
வீட்டில் இரவில் மின் விளக்கு போடவும் மற்றும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றவும் கிருஷ்ணமூர்த்தி தனது நண்பரான விஜயனிடம் கூறி, அவரிடம் வீட்டின் சாவியை கொடுத்திருந்தார். விஜயன் முதல் நாள் வந்து மின் விளக்குப் போட்டுள்ளார். 2-வது நாள் மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததைப் பார்த்து விஜயன் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே விஜயன், கிருஷ்ணமூர்த்திக்கு தகவல் தெரிவித்தார். அதன் 

பிறகு அரக்கோணம் டவுன் போலீசுக்கும் தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். பீரோவை உடைத்து ரூ.80 ஆயிரம், வெள்ளிப் பொருட்களை மர்ம நபர் யாரோ திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. 

இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தியின் தம்பி பக்தவச்சலம் கொடுத்த புகாரின்பேரில் அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்