குட்டையில் மூழ்கி தொழிலாளி பலி
வாணியம்பாடி அருகே குட்டையில் மூழ்கி தொழிலாளி பலியானார்.
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே குட்டையில் மூழ்கி தொழிலாளி பலியானார்.
வாணியம்பாடியை அடுத்த தகரகுப்பம் ஜோதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவன் (வயது 51), கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகில் உள்ள வண்டிமேடு பாலாறு குட்டையில் குளிக்கச் சென்றார். அவர் குட்டையில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
நேற்று காலை அந்த வழியாக சென்ற சிலர் குட்டையில் பிணம் கிடப்பதை பார்த்து விட்டு திம்மாம்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் மணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். குட்டையில் இருந்து பிணத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து திம்மாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ்விசாரணை நடத்தி வருகின்றனர்.