காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரியலூர்:
பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து அரியலூரில் காமராஜர் சிலை முன்பு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். இதில் கியாஸ் சிலிண்டருக்கு, காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து, கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் நகர தலைவர் சந்திரசேகர், வட்டாரத் தலைவர்கள் விஜயகுமார், விஜய் ஆண்டனி, மகளிரணி சகுந்தலா, மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.