அரசு ஆஸ்பத்திரி ஊழியர் கைது
இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த அரசு ஆஸ்பத்திரி ஊழியர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை:
பாளையங்கோட்டை தியாகராஜநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 38). இவர் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் நாகர்கோவில் பஸ் செல்லும் பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. அவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த இளம்பெண் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.
இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.