மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-04-02 20:06 GMT
திருச்சி, ஏப்.3-
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று மாநகர் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம்  முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் சி.ஐ.டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி இ.பி.ரோடு பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜா தலைமை தாங்கினார்.
இதேபோல் திருச்சி-கரூர் பைபாஸ் ரோடு கலைஞர் அறிவாலயம் எதிரே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் மலைகோட்டை பகுதியில் உள்ள பெட்ரோல்  விற்பனை நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மலைகோட்டை பகுதி செயலாளர் ராஜா மற்றும் மாவட்ட குழு உறப்பினர் அன்வர் ஹூசேன் கலந்து கொண்டனர். மாநகரம் முழுவதும் மொத்தம் 47 இடங்களில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 200 மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் கம்பரசம்பேட்டை பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் வினோத்மணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்