இந்த பரிதாப காட்சிக்கு காரணம் என்ன?
கோவிலாறு அணையில் மீன்கள் செத்து மிதந்தன.
வத்திராயிருப்பு
படத்தை பார்த்ததும் ஏதோ தண்ணீரில் வெள்ளை வெள்ளையாக மிதக்கிறது என்றுதான் நினைப்போம். சற்று உற்றுப்பாருங்கள், விஷயம் புரியும்...! மிதப்பது அனைத்தும் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள். இவ்வாறு கொத்துக்கொத்தாக மீன்கள் இறப்பது, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கோவிலாறு அணையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்த வண்ணம் உள்ளது. வெயிலின் கொடுமைதான், இந்த பரிதாபத்துக்கு காரணம் என விவசாயிகள் கூறுகிறார்கள். ஆனால் உண்மை நிலையை ஆராய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.