ரவுடி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ரவுடி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
சமயபுரம், ஏப்.3-
ஸ்ரீரங்கம் நரியன் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் கவுரிசங்கர் (வயது 33). பிரபல ரவுடியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மண்ணச்சநல்லூர் - சமயபுரம் செல்லும் சாலையில் வெங்கங்குடியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.விசாரணையில் வெங்கங்குடி கிராமத்தைச் சேர்ந்த சம்பத் மகன் சித்தார்த் (24) என்பவர் ரவுடி கவுிரி சங்கரை சங்கரை கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு சித்தார்த்தை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று இக்கொலை வழக்கு தொடர்பாக சித்தார்த்தின் தம்பி விஷ்ணு (23) என்பவரை போலீசார் கைது செய்தனர்.