‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

Update: 2022-04-02 19:53 GMT
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சேதமடைந்த மின்கம்பம்

தஞ்சாவூர் மாநகராட்சி பாம்பாட்டித் தெருவிலிருந்து ஆபிரகாம் பண்டிதர் நகர் சந்திக்கும் இடத்தில் உள்ள ஒரு மின் கம்பம் துருப்பிடித்து உள்ளது. மேலும் அதன் அடிப்பகுதியில் ஓட்டை விழுந்து உள்ளது.இதனால் மின்கம்பபம் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. எப்போதும் பொதுமக்கள் நடமாடடம் அதிகளவில் இருக்கும் எனவே, அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன்பு சேதமடைந்த இரும்பு மின் கம்பத்தை அகற்றிவிட்டுபுதிய மின் கம்பம் அமைத்துத் தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-களிமேடு, ஹரிகரசுதன்

மேலும் செய்திகள்