திருவண்ணாமலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110
திருவண்ணாமலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110-ஐ எட்டியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110-ஐ எட்டியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110
கச்சா எண்ணெய்யின் விலை உயர்வை காரணம் காட்டி கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. இதனால் சரக்கு வாகனங்களின் வாடகை, போக்குவரத்து கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டு உள்ளது.
திருவண்ணாமலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.103-க்கு விற்பனை செய்து வந்த நிலையில் தொடர் விலையேற்றம் காரணமாக நேற்று பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.
விலையை குறைக்க வேண்டும்
இன்றைய கால கட்டத்தில் மோட்டார் சைக்கிள் என்பது அனைவரது வாழ்க்கையிலும் ஒரு அங்கமாக உள்ளது. மோட்டார் சைக்கிள்கள் இல்லாத வீடுகளை பார்ப்பதே அரிதாகி விட்டது. ஏழை, எளிய மக்களின் மாதாந்திர குடும்ப செலவில் பெட்ரோலுக்கு பெரும் பகுதியை செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பொதுமக்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது தான் படி, படியாக அதில் இருந்து மீண்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.