7 மணி நேர மின்தடையால் பொதுமக்கள் அவதி

பள்ளிகொண்டா பகுதியில் 7 மணி நேர மின்தடையால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

Update: 2022-04-02 19:23 GMT
அணைக்கட்டு

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டா மற்றும் அதனைச் சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று பகல் ஒரு மணிமுதல் திடீரென மின்தடை ஏற்பட்டது.

மதிய வேளையில் கடும,் வெயில் கொளுத்தியதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். பல மணி நேரம் ஆகியும் மின்சாரம் வராததால் பொதுமக்கள் புழுக்கத்தில் தவித்தனர். 
ஐஸ்கிரீம் கடைகளில் மின்சாரம் இல்லாமல் அவை கரைந்து போனதால் வியாபாரிகளுக்கு இழப்பு ஏற்பட்டது.

மின் தடை குறித்து பள்ளிகொண்டா இளநிலை மின் பொறியாளரிடம் கேட்டபோது ஆம்பூர் அருகே உள்ள வணிக வளாகம் மையப்பகுதியில் செல்லும் உயரழுத்த மின்பாதையில் பழுது ஏற்பட்டு இருப்பதாகவும் அந்த பழுதை மின்வாரிய ஊழியர்கள் சரி பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அதனாலேயே மின்சாரம் தடை பட்டதாக கூறினார். 

நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மாலை 6 மணிக்கு பரவக்கல் வழியாகவரும் மின்சார லைனில் இருந்து மின் இணைப்பு வழங்கப்பட்டதாகவும் பள்ளிகொண்டா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு விரைவில் மின்சாரம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில் இரவு 8 மணிக்கு பின்னர்தான் மின்வினியோகம் சீரானது.

மேலும் செய்திகள்