சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது

காட்பாடி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-04-02 19:16 GMT
வேலூர்

வேலூர் மாவட்டம் காட்பாடி பிரம்மபுரத்தில் பணம் வைத்து சூதாடுவதாக காட்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். 

அப்போது பிரம்மபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் 4 பேர் சூதாடிக்கொண்டிருப்பது தெரிய வந்தது. போலீசாரை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். போலீசார் விரட்டி சென்று 3 பேரை மடக்கி பிடித்தனர். ஒருவர் தப்பியோடினார். 

போலீசாரின் விசாரணையில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த கார்த்தி (வயது 26), சீனிவாசன் (42), சந்திரசேகர் (48) மற்றும் தப்பியோடியவர் வினோத் (30) என்பதும், 4 பேரும் பணம் வைத்து சூதாடியதும் தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

அவர்களிடமிருந்து 200 ரூபாய், 40 கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய வினோத்தை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்