பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டல்

திருச்சியில் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து அதை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டிய கரூர் வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-02 19:16 GMT
திருச்சி, ஏப்.3-
திருச்சியில் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து அதை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டிய கரூர் வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தனியார் நிறுவன ஊழியர்
கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த சின்னமுத்தம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மகன் சரத்குமார் (வயது24). இவர் திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் சரத்குமாருக்கும் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவி ஒருவருக்கும்நட்புஏற்பட்டுள்ளது.இந்த நட்பு நாளடைவில் இருவருக்கும் நெருக்கத்தை ஏற்படுத்தி காதலாக மாறியுள்ளது. மேலும் சரத்குமார், பள்ளி மாணவியை தன்னுடைய ஆசைக்கு இணங்க வைத்து உல்லாசமாக இருந்துள்ளார்.
வீடியோ எடுத்து மிரட்டல்
ஒரு கட்டத்தில் தாங்கள் இருவரும் உல்லாசமாக இருந்ததை சரத்குமார் ரகசியமாக அதை செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்துள்ளார். இந்த விவகாரம் மாணவிக்கு தெரியவரவே, `இனி உன்னோடு பழக மாட்டேன்' என்று சரத்குமாரிடம் இருந்து விலகி சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரத்குமார், மாணவியை பலாத்காரம் செய்த வீடியோவை காண்பித்து மிரட்டி மேலும் பலமுறை பலாத்காரம் செய்துள்ளார்.
போக்சோ சட்டத்தில் கைது
தொடர்ந்து வீடியோவை காட்டி மிரட்டல் விடுத்த வாலிபரால், மன உளைச்சலுக்கு ஆளான மாணவி தன்னுடைய தாயாரிடம் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவியின் தாயார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்த சரத்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு, மனநல டாக்டர்களிடம் ஆலோசனை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்