பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டம்
அருப்புக்கோட்டையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விலை உயர்வு
அருப்புக்கோட்டையில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அகமுடையார் மகால் பஸ் நிறுத்தத்தில் இருந்து எம்.எஸ்.கார்னர், திருச்சுழி ரோடு வழியாக மரக்கடை பஸ் நிறுத்தம் வரை கம்யூனிஸ்டு கட்சியினர் ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து வந்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து மரக்கடை பஸ் நிறுத்தத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டம்
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகரச்செயலாளர் காத்தமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. நகர பொறுப்பாளர் தமிழ்செல்வராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தாமஸ், ஆட்டோ ஓட்டுனர்கள், சுமை தூக்கும் பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.