ஒடிசாவில் இருந்து கன்னியாகுமரிக்கு தாது மணல் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்தது
ஒடிசாவில் இருந்து கன்னியாகுமரிக்கு தாது மணல் ஏற்றி சென்ற லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
எஸ்.புதூர்,
ஒடிசாவில் இருந்து கன்னியாகுமரிக்கு கருப்பு நிற தாது மணல் ஏற்றிக்கொண்டு லாரி வந்து கொண்டிருந்தது. அதை ஒடிசாவை சேர்ந்த ஜாமிர்(வயது 29) என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்த நிலையில் லாரி மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புழுதிபட்டி அருகே வந்து கொண்டிருக்கும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் மற்றும் கிளீனர் அதிர்ஷடவசமாக உயிர் தப்பினர். லேசான காயமடைந்த டிரைவர் மற்றும் கிளீனர் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து புழுதிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.