பருத்தி நடவுக்காக வயல்வெளிகளில் களை எடுக்கும் பணி மும்முரம்

பருத்தி நடவுக்காக வயல்வெளிகளில் களை எடுக்கும் பணி மும்முரம்

Update: 2022-04-02 18:54 GMT
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன் பிடி தொழில் பிரதான தொழிலாக விளங்கி வருகின்றது. மீன்பிடி தொழிலுக்கு அடுத்தபடியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல், பருத்தி, மிளகாய் நிலக்கடலை உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள சத்திரக்குடி பகுதியில் உள்ள வயல்வெளிகளில் பருத்தி செடிகள் நடவு செய்வதற்காக 20-க்கும் மேற்பட்ட பெண்கள் வயல்வெளியில் வளர்ந்து நின்ற நாற்றுக்களை சிறிய மண் வெட்டி மூலம் களை எடுக்கும் பணியில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஈடுபட்டிருந்தனர். இதுபற்றி அந்தப் பெண்கள் கூறும்போது, கொளுத்தும் வெயிலில் காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணி வரையிலும் களை எடுக்கும் எங்களுக்கு கூலி ரூ.200 மட்டுமே கிடைக்கின்றது. இது குறைவான கூலி தான். இது எங்களுக்கு கஷ்டமாகவே உள்ளது. களை எடுக்கும் பெண் விவசாயிகளுக்கும் நல்ல கூலி கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்றனர். இதேபோல் போகலூர், காவனூர், முதுகுளத்தூர், திருஉத்திரகோசமங்கை உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து ஊர்களிலும் உள்ள விவசாய நிலங்களில் களை எடுக்கும் பெண்கள் குறைவான கூலி கிடைப்பதாக தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்