மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா
தாந்தோன்றிமலை மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
கரூர்,
தாந்தோன்றிமலை முத்துமாரியம்மன், பகவதியம்மன் கோவில் திருவிழா கடந்த 27-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி அன்று அமராவதி ஆற்றிலிருந்து மாரியம்மனுக்கு கம்பம் பாலித்து வந்து கம்பம் நடும் விழா நடந்தது. தொடர்ந்து தினமும் காலையில் அம்மனுக்கு அபிஷேகமும், மாலையில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலாவும் நடந்தது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதையொட்டி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து சாமி வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.