மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து முதியவர் சாவு
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து முதியவர் இறந்தார்.
கந்தர்வகோட்டை:
கந்தர்வகோட்டை அருகே உள்ள கோமாபுரம் அண்ணா நகரை சேர்ந்தவர் சாமுவேல் (வயது 63). இவர் கந்தர்வகோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது சாலை ஓரத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் சாமுவேல் படுகாயமடைந்தார். இதையடுத்து அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாமுவேல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.