ஆவுடையார்கோவில் பகுதியில், நிறுத்தப்பட்ட பஸ்களை இயக்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

பஸ்களை இயக்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-04-02 18:15 GMT
ஆவுடையார்கோவில்:
ஆவுடையார்கோவில் ஒன்றியம் கீழச்சேரி, குன்னூர், பலவரசன் ஊராட்சியில் ஏற்கனவே இயக்கப்பட்ட அறந்தாங்கி, குண்டகவயல், கீழச்சேரி, சிவந்தான்காடு, கணக்கன் வயல், நெட்டியேந்தல் ஆவுடையார்கோவில் வழித்தடத்தில், மினி பஸ், நகர பஸ்சை இயக்கவும், அறந்தாங்கி, பெருங்காடு, பள்ளத்தி வயல், இசைமங்களம், கிடங்கி வயல், சிறுமருதூர், வாட்டாத்தூர், மணமேல்குடி வழித்தடத்திலும் இயக்கப்பட்ட அரசு பஸ்சை உடனடியாக இயக்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த கலந்தர் தலைமை தாங்கி கோரிக்கை குறித்து விளக்கி பேசினார். இதில் சுப்பிரமணியன், நெருப்பு முருகேஷ், கீழச்சேரி சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டு பஸ்களை இயக்கக்கோரி கோஷம் எழுப்பினர். 

மேலும் செய்திகள்