பூட்டிகிடக்கும் பேரூராட்சி சிறுவர் பூங்கா திறக்கப்படுமா

குன்னத்தூர் சந்தைப்பேட்டையில் பூட்டிக்கிடக்கும் பேரூராட்சி சிறுவர் பூங்கா திறக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Update: 2022-04-02 18:10 GMT
குன்னத்தூர்
குன்னத்தூர் சந்தைப்பேட்டையில் பூட்டிக்கிடக்கும் பேரூராட்சி சிறுவர் பூங்கா திறக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
சிறுவர் பூங்கா
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் சந்தைப்பேட்டையில் கடந்த 2007-ம் ஆண்டு அப்போதைய கைத்தறித்துறை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா சிறுவர் பூங்காவை திறந்து வைத்தார். சிறிது காலம் பூங்கா பயன்பாட்டில் இருந்தது.
 பேரூராட்சி ஊழியர்கள் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்து வைத்திருந்தார்கள். குன்னத்தூர் பகுதி சிறுவர்-சிறுமியர் தங்களது பெற்றோருடன் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் மாலை நேரங்களில் மகிழ்ச்சியுடன் விளையாடி சென்றார்கள்.
புதர்மண்டி கிடக்கிறது
 இந்த நிலையில் கடந்த பல வருடங்களாக பூங்கா பயன்படுத்தாமல் இருந்ததால் பூங்கா மூடிக்கிடக்கிறது. இதனால் பூங்காவில் உள்ள சிறுவர் விளையாட்டு பொருட்கள் அனைத்தும் துருப்பிடித்து போய்விட்டது.மேலும் பூங்காவில் செடி,கொடிகள் முளைத்து புதர்போல் படர்ந்து கிடக்கிறது. 
ஆகவே பூங்காவை சுத்தம் செய்து பயன்பாட்டுக்கு திறந்து விட வேண்டும் என்று இப்பகுதி சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு  வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்