வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருச்செந்தூரில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு கற்பக விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் தம்பான் (வயது 22), முறப்பநாடு கோவில்பத்து பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி மகன் அய்யப்பன் (21). கடந்த மாதம் 15-ந்தேதி இவர்கள் இருவரும் திருச்செந்தூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட சண்முகபுரம்-ராணிமகாராஜபுரம் சாலையில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் தகராறு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கில் திருச்செந்தூர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தம்பான், அய்யப்பன் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஏற்று, தம்பான், அய்யப்பன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகலை திருச்செந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் பாளையங்கோட்டை சிறையில் வழங்கினார்.