தாண்டவன்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு விருது

தாண்டவன்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு விருது வழங்கப்பட்டது

Update: 2022-04-02 17:13 GMT
கொள்ளிடம்
ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு 2020-21-ம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிகளை தேர்ந்தெடுத்து தமிழ்நாடு தொடக்கக்கல்வித்துறை அறிவித்தது. இதில் கொள்ளிடம் ஒன்றியம், தாண்டவன்குளம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாவட்டத்திலேயே சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கான விருதை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் லலிதா, கொள்ளிடம் வட்டார கல்வி அலுவலர் சீனிவாசன் தாண்டவன்குளம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தனசேகரன் ஆகியோரிடம் வழங்கினார். இதில் மயிலாடுதுறை முதன்மைக்கல்வி அலுவலர், சீர்காழி கல்வி மாவட்ட அலுவலர், கொள்ளிடம் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர். சிறந்த உள்கட்டமைப்பு, பள்ளி வளர்ச்சியில் சமூக பங்களிப்பு, சமூக வளர்ச்சியில் மாணவர்கள்-ஆசிரியர்களின் ஈடுபாடு, மரம் வளர்ப்பு, மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் குளிரூட்டப்பட்ட மெய்நிகர் வகுப்பறைகள், அதிக எண்ணிக்கையிலான பள்ளி புரவலர்கள் உள்ளிட்டவைகள் சிறப்பாக செயல்பட்டதை தொடர்ந்து இப்பள்ளி மாவட்டத்திலேயே சிறந்த பள்ளிக்கான விருதை பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்