கடலூரில் ஆயுதப்படை காவலர்களுக்கான கவாத்து பயிற்சி நிறைவு விழா

கடலூரில் ஆயுதப்படை காவலர்களுக்கான கவாத்து பயிற்சி நிறைவு விழா

Update: 2022-04-02 17:13 GMT

கடலூர்

கடலூர் மாவட்ட காவல்துறை ஆயுதப்படை காவலர்களுக்கான வருடாந்திர படைதிரட்டு கவாத்து பயிற்சி கடந்த மாதம் 15-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் போலீசாருக்கு அனைத்து கவாத்து பயிற்சி, நவீன ஆயுதங்களை கையாளுதல், கலவர கூட்டத்தை கட்டுப்படுத்துதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 
இந்நிலையில் பயிற்சியின் நிறைவு விழா நேற்று முன்தினம் கடலூர் ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் நடைபெற்றது.

இதற்கு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் தலைமை தாங்கினார். இதில் கடலூர் மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கும், தாலுகா போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீசாருக்கும் ஆயுதப்படை பயிற்சி மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களுடன் இணைந்து கைப்பந்து, கயிறு இழுத்தல், கிரிக்கெட், கபடி, வட்டு எறிதல், குண்டு எறிதல் போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும் காவலர்களின் குடும்பத்தார்களுக்கு மியூசிகல் சேர், தண்ணீர் நிரப்பும் போட்டி, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.

இதையடுத்து சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம்,  விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாண்டியன் ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர். முன்னதாக பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் கூடுதல் கலெக்டர்கள் (வருவாய்) ரஞ்ஜீத்சிங், (வளர்ச்சி) பவன்குமார் கிரியப்பனவர், கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, மாநகராட்சி ஆணையர் விஸ்வநாதன், மத்திய சிறை சூப்பிரண்டு தமிழ்செல்வன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் அசோக்குமார், இளங்கோவன், உதவி போலீஸ் சூப்பிரண்டுகள் அங்கித் ஜெயின், (பயிற்சி) ரகுபதி, துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில் விநாயகம் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு சவுந்தரராஜன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்