ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைந்த பின்னரே காங்கிரஸ் குறித்து சிவசேனா கருத்து கூற வேண்டும்- மந்திரி அசோக் சவான் பேட்டி

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைந்த பின்னர் காங்கிரஸ் குறித்து சிவசேனா கருத்து கூற வேண்டும் என அசோக் சவான் கூறியுள்ளாா்.

Update: 2022-04-02 17:10 GMT
கோப்பு படம்
மும்பை, 
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைந்த பின்னர் காங்கிரஸ் குறித்து சிவசேனா கருத்து கூற வேண்டும் என அசோக் சவான் கூறியுள்ளாா்.
கூட்டணியில் இணைய வேண்டும்
சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் அடிக்கடி காங்கிரஸ் தலைமை மற்றும் அந்த கட்சியில் செயல்பாடுகள் குறித்து கருத்து கூறி வருகிறார். இது காங்கிரசாருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
 இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், மந்திரியுமான அசோக் சவானிடம் நிருபர்கள் கேட்ட போது, “அவர் (சஞ்சய் ராவத்) சிவசேனா காங்கிரசில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து கருத்து கூறுவதற்கு முன், முதலில் அவர்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைய வேண்டும்” என்றார்.
தனிப்பட்ட கருத்து
மேலும் அவர் கூறுகையில், " சோனியா காந்தியின் தலைமை குறித்து கூட்டணியில் உள்ள எந்த கட்சிக்கும் மாற்று கருத்து இல்லை. சஞ்சய் ராவத்தின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். சிவசேனா முதலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைய வேண்டும். அதன் பிறகு கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து தலைமை குறித்து ஆலோசிக்கலாம் " என்றாா்.

மேலும் செய்திகள்