தர்மபுரி அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை தொழிலாளி கைது

தர்மபுரி அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-02 16:33 GMT
தர்மபுரி:
தர்மபுரி குப்பூர் அருகே உள்ள சித்தன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 32). கட்டிட தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் ஏற்கனவே திருமணமான 29 வயது பெண்ணிற்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். அதை கண்டித்த அந்த பெண்ணையும், அவருடைய 2 குழந்தைகளையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் காயம் அடைந்த பெண் மற்றும் 2 குழந்தைகள் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரங்கசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்திபனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்