சுதந்திர திருநாள் அமுத பெருவிழா நிறைவு: மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்-கலெக்டர் வழங்கினார்
சுதந்திர திருநாள் அமுத பெருவிழா நிறைவையொட்டி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 75-வது சுதந்திர தின விழா, சுதந்திர திருநாள் அமுத பெருவிழா, பல்துறை பணி விளக்க கண்காட்சி நிறைவு விழா நடைபெற்றது. விழாவில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கலந்து கொண்டு சிறப்பாக அரங்குகள் அமைத்த துறை அலுவலர்களுக்கு நினைவு பரிசுகளும், கலை பண்பாட்டு துறை சார்பாக கலை நிகழ்ச்சிகள் நடத்திய கலைஞர்களுக்கும், பள்ளி, கல்லூரியை சார்ந்த 400 மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் செந்தில்குமார், கிருஷ்ணகிரி நகர் மன்ற தலைவர் பரிதாநவாப், நகர் மன்ற உறுப்பினர் பாலாஜி, தாசில்தார் சரவணன், தலைமை ஆசிரியர் மகேந்திரன், அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரிவேணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.