மின்வாரிய ஊழியர், சிகிச்சை பலனின்றி சாவு

மின்சாரம் தாக்கிய படுகாயம் அடைந்த மின்வாரிய ஊழியர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2022-04-02 16:23 GMT
வேளாங்கண்ணி:
கீழையூர் அருகே திருக்குவளை வட்டம் முத்தரசபுரம் வடக்குத்தெரு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (வயது 46).இவர் திருப்பூண்டியில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் கம்பியாளராக பணிபுரிந்து வந்தார்.கடந்த மாதம் 24 -ந்தேதி திருப்பூண்டி அருகே மூலக்கடை பகுதியில் உள்ள மின்மாற்றியில்  பாலசுப்ரமணியன் ஏறி பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கை மின்கம்பியில் பட்டதால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரிஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து நாமக்கலில் உள்ள ஒரு தனியார்  ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நேற்று சிகிச்சை பலனின்றி பாலசுப்ரமணியன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்த பாலசுப்ரமணியனுக்கு தனலட்சுமி என்ற மனைவியும், கிஷோர் பாலன், பூபாலன் என்ற  2 மகன்களும் உள்ளனர்.


மேலும் செய்திகள்