நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

விழுப்புரம் நகரில் நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

Update: 2022-04-02 16:19 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் நகரில் நெடுஞ்சாலையோரங்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவிட்டார். அதன்படி விழுப்புரம் நகரில் முத்தாம்பாளையம் புறவழிச்சாலையில் இருந்து ஜானகிபுரம் புறவழிச்சாலை வரை சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டனர். இதில் சாலையோரங்களில் இருந்த பழக்கடை, பூக்கடை, தள்ளுவண்டி கடை மற்றும் அங்குள்ள கடைகளில் இருக்கும் விளம்பர பலகைகள், மேற்கூரைகள் உள்ளிட்டவற்றை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். அதுபோல் சாலையோர வாய்க்கால்களை ஆக்கிரமித்து வைத்திருந்த கடைகளும் அகற்றப்பட்டது.
இப்பணிகளை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் தன்ராஜ், உதவி பொறியாளர் வசந்தப்பிரியா, சாலை ஆய்வாளர்கள் பழனியம்மாள், அம்சவேணி ஆகியோர் பார்வையிட்டனர். மேலும் சாலையோரங்களை ஆக்கிரமிப்பு செய்து மீண்டும் கடை வைத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை மூலம் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறையினர் எச்சரித்தனர். 

மேலும் செய்திகள்